அஜீத் நடிகைக்கு ரசிகர்கள் மீண்டும் அட்வைஸ்..
தல அஜீத் மகளாக விஸ்வாசம் மற்றும் என்னை அறிந்தால் படங்களில் நடித்தவர் அனிகா. இவர் தற்போது குமரி ஆகிவிட்டார். ஆனாலும் தல ரசிகர்கள் அனிகாவை குழந்தை போலவே பார்க்கிறார்கள். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் அனிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் பகிர்கிறார். அதைக்கண்டு அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கு அட்வைஸ் மழையா பொழிகிறார்கள். தல பொண்ணா நடிச்சிட்டு இப்படியா கவர்ச்சி போட்டோ போடுறது. இதையெல்லாம் குறைச்சிக்க. உன்ன அப்பா, அம்மா கண்டிக்கமாட்டார்களா என்று ஒரு புகைப்படம் போட்டாலே அவரை குடும்பம் வரை இழுத்து விடுகிறார்கள். அதுபற்றி அனிகாவும் பல முறை விளக்கம் அளித்துவிட்டார். என்னை ஒரு நடிகையாகப் பாருங்கள் என்று கூறியும் விட்டார். ஆனாலும் தல ரசிகர்கள் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
தற்போது அனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பூச்சு கிரீம், வாசனை பொருட்களை வெளியிட்டு அதற்கு விளம்பரம் செய்திருக்கிறார். அவர் கூறும்போது,எனக்கு இந்த வாசனை பொருளும், முக கிரீமும் மிகவும் பிடித்திருக்கிறது. கேரட் கொண்டும் கற்றாழை கொண்டும் இது தயாரிக்கப் பட்டிருக்கிறது. இயற்கையான பொருட்கள் அழகும் ஆரோக்கியமும் தரும். கெமிக்கல் எதுவும் கலப்பில்லை, செயற்கை நிறம், சின்தெடிக் கெமிக்கல் இல்லை.சென்சிடிவ் தோல்களுக்கும் கெடுதல் இல்லை எனப் பதிவிட்டிருக்கிறார். அனிகாவின் இந்த விளம்பரத்தைப் பார்த்து, நீ இன்னும் சின்ன பொண்ணு தான் குழந்தைப் பருவத்தை அனுபவி. அதற்குள் விளம்பரம் அது இது என்று செய்து சிறுவயது சுகங்களை இழந்துவிட வேண்டாம் எனக் கூறி உள்ளனர்.