செல்ல பிராணிக்கு வாயில் முத்தமிட்ட பிரபல நடிகை..

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். சண்டகோழி 2, சர்கார், சமீபத்தில் வெளியான டேனி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் வரலட்சுமி. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் ரயில்களில் ஊருக்குப் புறப்பட்ட போது அவர்களுக்கு நேரடியாக சென்று உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.கொரோனா தொற்று செல்ல பிராணிகளால் பரவுகிறது என்ற வதந்தி பரவியதையடுத்தும், செல்லப் பிராணிகளுக்கு உணவு தரமுடியாமலும் தாங்கள் வளர்த்த பிராணிகளை வெகு தூரம் அழைத்துச் சென்று கைவிட்டனர்.

சாலைகளில் தற்போது தெரு நாய்களுடன் வீட்டு வளர்ப்பு நாய்களும் உணவுக்காகச் சுற்றித் திரிவதைக் காண முடிகிறது. அதற்கும் ஒரு விழிப்புணர்வு தரும் வகையில் செல்ல நாய்களுடன் நடிகை வரலட்சுமி தனது பொழுதை நெருக்கமாக விளையாடிக் கழித்து அதனை இணைய தள பக்கத்தில் வெளியிடுகிறார். தனது செல்லப்பிராணிக்கு வாயில் முத்தம் கொடுத்து அந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். இதுவும் கொரோனா விழிப்புணர்வுக்கான புகைப்படமாகவே பார்க்கப்படுகிறது.

வரலட்சுமி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நிறையப் படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது நடித்தும் வருகிறார். தெலுங்கில் சந்தீப் கிஷனின் 'தெனாலி ராம கிருஷ்ணா' படத்தில் நடித்தார், மேலும் 'பாண்டம் கோடி 2' மற்றும் வரவிருக்கும் ரவி தேஜாவின் கிராகிக்' , 'நாண்டி' மற்றும் தமிழில் கன்னிராசி, காட்டேரி, கலர்ஸ்' 'பிறந்தால் பராசக்தி' போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

More News >>