ரஸ்க்கில் இப்படி ஒரு கலக்கலான பாயசமா??வாங்க சுவைக்கலாம்!!
தினமும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபியில் ரஸ்க்கை தோய்த்து சாப்பிடும் சுவையே தனி சுவை....இவை சிலரின் வாழ்வில் அன்றாட தேவையாக மாறிவிட்டது.அப்படிபட்ட சுவையான ரஸ்க்கில் குழந்தைகளை கவரும் வகையில் எப்படி பாயாசம் செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
ரஸ்க்- 4 துண்டுகள்
கருப்பு ஏலக்காய்- 4
பால்-1 கப்
உலர்ந்த திராட்சை-12
முந்திரி-6
நெய்-1 கப்
பால்-1கப்
சர்க்கரை- 4 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி கொள்ளவும்.பிறகு சூடான நெய்யில் முந்திரி,திராட்சை சேர்த்து நன்றாக கிளறவும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்தவுடன்,நொறுக்கிய ரஸ்க் மற்றும் பால் சேர்த்து கைவிடாமல் கட்டிகள் வராதவாறு கிளற வேண்டும்.
இந்த கலவை கெட்டியாக மாறும் வேளையில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாசனைக்காக, அரைத்து வைத்த ஏலக்காய் தூளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட வேண்டும்.
இனிப்பான,சுவையான பாயாசம் தாயார்..வீட்டில் உள்ள அனைவருக்கும் சூடாக பரிமாறி மகிழுங்கள்.