மும்பையை அடுத்து லக்னோவை அதிரவைக்கப் போகும் விவசாயிகள் படை!

மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

கடந்த மார்ச் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மாநில அரசாங்க அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து நாசிக் நகரிலிருந்து தொடங்கிய திரளான விவசாயிகள் பேரணி, மார்ச் 11 ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையை சென்றடைந்தது.

மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம் நோக்கிச் சென்ற அந்தப்பேரணி இந்திய விவசாயிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்டது. அநேகமாக சுதந்திரத்திற்குப் பின் சுமார் 30ஆயிரம் விவசாயிகள் இடைவிடாது 6 நாள் நடத்திய பேரணி இதுவாகத்தான் இருக்கும்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு விலை வழங்க வேண்டும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும், வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>