சென்னைக்கு 2020 ஆம் ஆண்டின் உலகளாவிய நீர் விருது...!
சென்னை கோயம்பேட்டில் உள்ள நீர் மறுசுழற்சி மையம் 2020 ஆண்டிற்கான உலகளாவிய நீர் விருதினை பெற்றுள்ளது . Waste water project of the year என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
TTRO ( Territory Treatment Reverse Osmosis ) என்ற முதன்மையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சென்னை கோயம்பேட்டில் உருவாக்கப்பட்டுள்ள நீர் மறுசுழற்சி மையம் இந்தியாவில் உள்ள ஒரு பெரிய மறுசுழற்சி மையமாகும்.
இது CMWSSB என்ற அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
இந்த TTRO plant ஆனது நான்கு நிலைகளையுடையது அதன் மூலம் நீரை மறுசுழற்சி செய்கிறது . இந்தியாவில் Reverse Osmosis எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்ட முதல் plant இதுவாகும்.
இந்த plant ன் மூலம் நாளொன்றுக்கு 45 MLD ( Million Litre per day ) நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது.இந்த திட்டமானது நகர்புறஙகளின் நீர் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு சிறந்த திட்டமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 20% கழிவு நீரை மறுசுழற்சி செய்து 16 மில்லியன்டெட்ரிக் நீரை மறுசுழற்சி செய்யும் இந்தியாவின் முதல் நகரமாக சென்னை திகழ்கின்றது