தனிமையில் இருந்த நண்பனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்ற விஜய்..

நடிகர் விஜய் ரசிகர் நண்பா என்குறிப்பிடுவார். அவரது வாழ்க்கையிலும் சில நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சஞ்ஜீவ். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சஞ்சீவ், விஜய்க்கு ஒரு போன் செய்தார். அப்போது தனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அதனால் மனைவி குழந்தைகளை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தினரை பிரிந்து தனியாக இருப்பதாகவும் கூறினார். அவரிடம் நலம் விசாரித்த விஜய் பாதுகாப்பாக இருக்கும் படி கூறியதுடன் அவருக்கு தானே மதிய சாப்பாடு கொண்டு சென்று தந்தாராம்.

இதுபற்றி தெரிவித்த சஞ்சீவ்,விஜய் தனக்காக சாப்பாடு கொண்டு வந்தார். எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை நேரில் சென்று பார்க்கவில்லை. எனது வீட்டு காவலாளியிடம் சாப்பாடு கொடுத்து விட்டு தகவல் சொல்லிவிட்டுச் சென்று விட்டார் என்றார். நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தை முடித்து அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்பாகம் துப்பாக்கி 2ம் பாகமாக உருவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எனது படங்களில் 2ம் பாகம் படமாக எதையும் இயக்கும் எண்ணம் இல்லை என்றார். எனவே முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது புதிய ஸ்கிரிப்ட் தான் என்பது தெரிய வந்துள்ளது.

More News >>