சுவையான தேங்காய்ப் பால் பாயசம்..!
சுவையான தேங்காய்ப் பால் பாயசம் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
துருவிய மஞ்சள்பூசணி – அரை கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், பச்சைக் கற்பூரம் – மிளகளவு ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்.
உணவு செய்முறை
முதலில் தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும்.
பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத்தூவலாம்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com