ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி…!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் “இனி அதிக கட்டணம் செலுத்த தயாராக இருங்கள்” என்று கூறி இருக்கிறார் ஏர்டெல் உரிமையாளர் சுனில் பாரதி மிட்டல்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தான் இணையக்கட்டணம் மிகவும் குறைவு. உதாரணத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் 3000 முதல் 7000 வரை வாங்கப்படும் அதே நேரத்தில் இந்தியாவில் 16 GB, ரூ. 160 முதல் தரப்படுகிறது. அதாவது 1GB, ரூ. 10 க்கு விற்கப்படுகிறது.

இத்தகைய விலை நிர்ணயத்தால் நெட்வொர்க் தொழில் அதிகமாக பாதிக்கப்படும் என்றும், இதை தொடர முடியாத சூழல் உருவாகும் என்றும் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். இதனால், 1GB, ரூ. 100 என்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அதை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கும்படியும் அவர் அறிவித்துள்ளார்.

எனில்,

முந்தைய கட்டணம்

1GB - ரூ. 10

16 GB - ரூ.160

எதிர்ப்பார்க்கப்படும் கட்டணம்

1GB - ரூ. 10016GB - ரூ. 1600

கொரோனாவால் விட்டிலிருந்தபடியே வேலை, ஆன்லைனில் வகுப்புகள் என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய விலை உயர்வு நிச்சயம் மக்களை பாதிக்கும்.

லாபம் பார்க்க முடியாததால் தான் இந்த விலை உயர்வு என்று மிட்டல் கூறியுள்ளார். ஆனால், ஜியோ அதே விலையில் இன்றும் பல வகையில் லாபம் பார்க்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒருவேளை ஏர்டெல் விலையை அதிகரித்தால், மற்ற நெட்வொர்க்கும் ஜியோவுடன் சேர்த்து விலையை அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். இதனால் நெட்வொர்க் நிறுவனங்கள் லாபம் பார்த்தாலும், அதிகமாக பாதிக்கப்பட போவது மக்கள்தான்.

ஏர்டெல் இந்த முடிவைக் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்..!

More News >>