முன்னாள், இந்நாள் வீரர்கள் யாரும் பேசக்கூடாது!.. தோனி ஓய்வால் சிக்கலை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திர சிங் தோனி. அப்போதில் இருந்த அவரை பல பிரபலங்களும், பல நாட்டு வீரர்களும் வாழ்த்தி பேசி வருகின்றனர். வாழ்த்தின் கூடவே, தோனிக்கு சென்ட் ஆப் மேட்ச் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களைப் போலவே பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்க்கும் தோனி குறித்த தனது யூடியூப் பக்கத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், ``தோனி மாதிரியான ஒரு பெரிய வீரருக்கு, சென்ட் ஆப் மேட்ச் நடத்தாதது மனதில் வேதனை தருகிறது. அவருக்கு வழியனுப்பு நடத்தாது பிசிசிஐயின் தோல்வி. தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களும் இதையே உணர்வார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு முறையான வழியனுப்பு விழா நடத்தாதது என் மனதில் வேதனை அளிக்கிறது" என்றுகூறியிருந்தார்.

இவரின் இந்தக் கருத்து ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களுக்கும் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முஷ்டாக் தோனி குறித்துத் தெரிவித்த கருத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முஷ்டாக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இனி இந்திய வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளது. அவர் மட்டுமல்ல, முன்னாள், இந்நாள் வீரர்கள் அனைவரும் இனி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறையை அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

More News >>