ஐக்கிய அரபு அமீரகத்தில் சுகாதாரத் துறையினரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி

தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தான் முன்நின்று போராடி வருகின்றனர். 24 மணி நேரமும் பணியில் இருந்து வரும் சுகாதாரத் துறையினரை பல்வேறு நாடுகளும் கவுரவித்து வருகின்றன. இந்தியாவிலும் சுகாதாரத் துறை ஊழியர்களை கவுரவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்குச் சம்பள உயர்வு உட்படப் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது சுகாதாரத் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று அந்நாட்டுக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி சுகாதாரத் துறையினரின் 700 குழந்தைகளுக்கு இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கிடைக்கும்.

More News >>