விரைவில் முதல் குழந்தை... மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ஜோடி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கரம் பிடித்தனர். வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். திருமணம் செய்துகொண்டாலும் தங்கள் துறையில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். அதனால் அவர்களிடம் இருந்து எந்த மகிழ்ச்சியான செய்தியும் வராமல் இருந்தது. ரசிகர்களும் பல முறை அனுஷ்கா, விராட்டிடம் இதை கேள்வியாக முன்வைத்தனர்.
ஆனால் தற்போது அந்த கேள்விக்கு இருவரும் விடை சொல்லியுள்ளனர். விரைவில் இருவருக்கும் முதல் குழந்தை பிறக்க உள்ளது என்பதே அந்த விடை. ஜனவரி 2021ல் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தப் பதிவைப் பதிவிட்ட 40 நிமிடங்கள் 3 கோடியை நெருக்கி லைக் சென்றுகொண்டிருக்கிறது.