சுஷாந்த்துக்கு விஷம் கொடுத்து கொன்ற காதல் நடிகையை கைது செய்ய வேண்டும்.. நடிகரின் தந்தை மற்றும் சகோதரி கோரிக்கை..
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வெளியானது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில் பலவேறு திருப்பங்கள் ஏற்பட்டது. சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை அவரை கொலை செய்திருப்பதாகவும் போதை மருந்து கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15 கோடி ரூபாய் கையாளப்பட்டுள்ளது என்று புகார் எழுந்தது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
சுஷாந்த் காதலி இந்த வழக்கில் வகையாகச் சிக்கி இருக்கிறார். அவரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்து வருகிறது. சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுத்து வந்தார் என்பது தெரிய வந்தது. டீயில் 30 நிமிடத்துக்கு ஒருமுறை அவருக்குப் போதை மருந்து கொடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் சுஷாந்தை வளைத்துப்போட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது. தற்போது ரியா மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ள சுஷாந்த் தந்தை கேகே சிங்,ரியாவை கைது செய்ய வேண்டும் கூறி உள்ளார். சுஷாந்திற்கு விஷம் கொடுத்து, அவரைக் கொன்று விட்டார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங் கீர்த்தியும் ரியா உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.முன்னதாக நேற்று பேட்டி அளித்த சுஷாந்த் தரப்பு வக்கீல் விகாஸ் சிங், தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக ரியா கொடுத்து அவரை மரணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே சுஷாந்த் மரணத்திற்கு வழி வகுத்தது என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.