ஒரு விவசாயிக்கு மாதம் ரூ.3000 .... மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
மத்திய அரசு பல திட்டங்களை விவசாயிகளுக்கும் , இடைநிலை வணிகம் செய்பவர்களின் வயது முதிர்வுக்கு பின் அவர்களின் வருவாய்க்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது .
அதில் PMKMY ( Pradhan Mantri Kisan Maan Dhan Yojana ) எனும் திட்டம் விவசாயிகளின் வயது முதிர்வுக்கு பின் அவர்களின் வருவாய்க்கு வழி வகை செய்யும் திட்டமாகும்.
இந்த திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான திட்டமாகும் இது 01.08.2019 அன்று நடைமுறை படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ஒரு விவசாயி 60 வயதினை கடந்த பின் மாதம் ரூபாய் 3000 பெறலாம் .அவர் இறந்து விட்டால் அவரின் மனை வி 50% தொகையை ஓய்வூதியமாக பெறலாம்.
தகுதிகள் 1. சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டும்.
2. வயது 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. பயிரிடப்படும் நிலமாக 2 ஹெக்டேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
இது ஒரு பங்களிப்பு திட்டமாகும் . விவசாயிகள் பாதி தொகையும் மீதமுள்ள தொகையை மத்திய அரசு ஏற்று கொள்ளும்.
ஆவணங்கள் 1. ஆதார் அட்டை2. வங்கி கணக்கு 3. Pm-Kisan கணக்கு.
விண்ணப்பிக்கும் முறை
1. அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ( CSC) விண்ணப்பிக்கலாம்.
2. ஆதார் அட்டையின் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்படும் .
3. பயனாளரின் வயதுக்கு ஏற்ப பங்களிப்பு தொகை கணக்கிடப்படும்.
4. முதல் தவனை செலுத்திய பின் auto debit மூலம் அடுத்த தவணை தொகை கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.5. பதிவு செய்யப்பட்ட பின் KPAN ( KISAN PENSION ACCOUNT NUMBER ) பிரதி எடுத்து தரப்படும்.
உதாரணமாக ஒரு விவசாயியின் வயது 32 எனில் அவர் பங்காக மாதம் 120 ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய அரசின் பங்காக 120 ரூபாய் செலுத்தப்படும். அவரின் வயது 60 அடையும் போது அவருக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியமாக கிடைக்கும் .