அருந்ததியர் உள் ஒதுக்கீடு ! உச்சநீதிமன்ற தீர்ப்பு !
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
அருந்ததியர் தமிழ்நாட்டில் 15.7% சதவிகிதம் உள்ளனர். பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் பின் தங்கியுள்ள அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. பட்டியலினம் என்பதே தனிப்பிரிவு தான் எனவே அந்த பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு வழங்க இயலாது என்று கூறி அருந்ததியனர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சரவணகுமார் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான குழு விசாரித்து, அரசியல் சாசன அமர்வானது அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பளித்து உள்ளது . சமூக நீதி வரலாற்றில், இத்தீர்ப்பு ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.