எதுவும் சந்தோஷமான செய்தி இல்லை...எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் புதிய தகவல்
எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை, உடல்நிலை சீராக இருந்தாலும் அது சந்தோஷம் தந்துவிடாது..
வீடியோவில் சரண் புதிய தகவல்..
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக் கப்பட்டார். அவரது உடல்நிலை மோச மானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப் பட்டு வருகிறது. அமெரிக்க டாக்டர் களுடன் மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கின் றனர். முன்னதாக திரையுலகினரும் ரசிகர்களும் எஸ்பிபி குணம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
டாக்டர்கள் சிகிச்சை, பிரார்த்தனைகளுக்குபிறகு எஸ்பிபி பற்றி நல்ல செய்திகளாக வந்துக்கொண் டிருக்கிறது நேற்று மாலை சரண் வெளியிட்ட வீடியோவில், மருத்துவமனை சென்று என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கூறும்போது என் தந்தையின் நுரையீரலில் முன்னேற்றம் தெரிகிறது. இது அவர் குணம் அடைவதற்கான முதல் படி இன்னும் நீண்ட சிகிச்சை இருக்கும் அது சீராக அவரது உடலை குணம் அடையச் செய்யும். அவர் அறையில் பாடல்கள் ஒலிக்கவைக்கப்படிருக்கிறது அதை கேட்டபடி விரல்களால் தாளம் போடுகிறார். எதையோ எழுதி காட்ட முயன்றார். ஆனால் பேனாவை அவரால் பிடிக்க முடியவில்லை. அடுத்த வாரம் எழுதி காட்டும் அளவுக்கு தேறுவார். அவருக்கு பத்திரிகை படித்துக்காட் டப்படு கிறது. டாக்டர்கள் கேட்பதற்கு பதில் அளிக்கிறார். நேற்று முன் தினம் பார்த்த தைவிட இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்காக பிரார்த னை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.இந்நிலையில் இன்று மாலை சரண் வெளியிட்ட வீடியோவில்,அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. இன்றைக்கு நான் மருத்துவமனை செல்ல வில்லை. டாக்டர்கள் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரார்த்தனை களும் கைகொடுத்து வருகிறது. பழைய நிலைக்கு அவர் திரும்பிக்கொண்டிருகிறார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படு கிறது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது அவரது உடல்நிலை குறித்து வரும் நாட்களில் நான் இன்னும் விரிவாக அப்டேஸ் தருவேன் ஆனால் எதுவும் சந்தோஷ மான செய்தி இல்லை. அப்பா உடல்நிலை சீராக உள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாசிடி வாக இருக்கிறது. இன்னும் சிகிச்சை தொடர்கிறது. அவரது உடல்நிலை சீராகி வருகிறதுஇவ்வாறு சரண் கூறினார்.