கர்நாடகாவில் ஒரே பந்தலில் விநாயகர் சதூர்த்தி, மொகரம்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமை விழா..
கர்நாடகாவின் ஹுப்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரே பந்தலில் விநாயகர் சதுர்த்தியையும், மொகரத்தையும் கொண்டாடுகிறார்கள்.கர்நாடக மாநிலம், தா்வாடு மாவட்டத்தில் ஹூப்ளி நகரம் உள்ளது. இங்குள்ள பிட்நால் என்ற பகுதியில் ஆண்டாண்டு காலமாக ஒரே பந்தலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தியையும், முஸ்லிம்களின் மொகரத்தையும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டும் அதே போல் ஒரே பந்தலில் ஒரு பகுதியில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இன்னொரு பகுதியில் மொகரம் கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது பற்றி மவுலானா ஜாகிர் காஜி கூறுகையில், விநாயகர் சதுர்த்தியும், மொகரமும் ஒரே சமயத்தில் வருகின்றன. அதைப் பல ஆண்டு காலமாக ஒரே பந்தலில் கொண்டாடி வருகிறோம். இங்கு எல்லோருமே கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கப்படுகிறார்கள். யாரிடமும் எந்த பேதமும் ஏற்பட்டதில்லை என்றார். மோகன் என்பவர் கூறுகையில், பல ஆண்டு பாரம்பரியத்தை நாங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்.