ஒரு முறை கொரோனா வந்த நபருக்கு மீண்டும் கொரோனா.. உலகில் இது முதல் முறை!

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் முழுவதும் ஈடுபட்டிருக்கின்ற அதே வேளையில் ஒருமுறை கொரோனா தாக்கியவர்களுக்கு மறுமுறை கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஆராய்ச்சிகளுக்கு மத்தியில், ஒருமுறை கொரோனா வந்த நபருக்கு மீண்டும் பாதிப்ப வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது . ஹாங்காங்கைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் கொரோனா பாதிப்பு உறுதியானது. சில நாட்களில் அதிலிருந்து மீண்ட அவருக்கு தற்போது மீண்டும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என ஹாங்காங் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபரின் உடலில் இருந்து தற்போது வந்துள்ள தொற்று ஏற்படுத்திய வைரஸின் மரபணுவையும், கடந்த முறை தொற்று ஏற்படுத்திய வைரஸில் காணப்படும் மரபணுக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. ஆய்வின் முடிவில் இரண்டுமே வெவ்வேறு மரபணுக்கள் என்று முடிவுகள் வந்துள்ளன.

இதற்கு முன்பு, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. மேலும் எதிர்ப்பு சகதி குறைந்தது 6 மாதங்கள் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு மாதங்களிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு வந்துள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>