4000 எடுத்து வெச்சுட்டு கேக்க வெட்டுங்கா.. நடிகர் அப்பாவுக்குப் பிள்ளைகள் கண்டிஷன்..

நடிகர் சூரிக்கு நேற்று 43வது பிறந்த நாள்.இதையொட்டி அவரது ரசிகர்கள் ஹீரோக்கள் பாணியில் மரம் நட்டு, ரத்ததானம் அளித்து, கொரோனா ஊரடங்கு உதவிகள் வழங்கி சூரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். சூரிக்கு டைரக்டர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏராளமானவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் சூரியின் பிள்ளைகள் கேக் வாங்கினர். பேக்கரிக்கு சென்று ஸ்பெஷல் கேக் வாங்கி வந்தனர். பிறகு அப்பா வாங்க கேக் வெட்டுங்க என்று சூரியை அழைத்து வந்தனர்.

தேங்ஸ் கண்ணுங்களா என்று கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கேக் மேல் விலைப் பட்டியல் இருந்ததுதான் அதற்குக் காரணம். கேக் செலவு-1500, பெட்ரோல் செலவு - 500 , டெக்ரேஷன் செலவு - 2000 மொத்தம் -4000. மொதல்ல காசு குடுத்துட்டு அப்பறம் கேக் வெட்டு என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சூரி,400 ரூவா கேக்கை கொடுத் துட்டு 4000 ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

சூரி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தவர். மதுரையில் அம்மன் உள்ளிட்ட சில மாவடங்களில் ஓட்டல் திறந்திருந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் பிஸ்னஸிலும் சூரி கவனம் செலுத்துகிறார். அந்த பிஸ்னஸ்களை குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டார். வருமானம் இழந்து பதிப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை போன்றவர்களுக்கு உதவியதுடன் உதவிகள் பெற்றுத் தந்ததும் நற்பணிகள் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>