பிரபல இயக்குனருக்காக களமிறங்கும் மக்கள் செல்வன்

நடிகர் சசிகுமார் நடித்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் "அசுரவதம்". சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" புகழ் மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். சசிகுமார் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் குட்டிப்புலி. முத்தையா இயக்கி வெளியான இத்திரைப்படம் சற்று சுமாரான விமர்சனத்தையே பெற்றது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் வேறு ஒரு பட நிறுவனத்திற்காக நடித்துள்ள இப்படத்தை (அசுரவதம்) லீனா லலித்குமாரின் "செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்" தயாரித்துள்ளது.

எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீஸரை சில நாட்கள் முன்பு பிரபல இயக்குனர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாளை மாலை 3 மணிக்கு வெளியிடவுள்ளார். ஏற்கனவே அசுரவதம் படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை இன்னொரு இன்ப அதிர்ச்சியாக ட்ரைலரை விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.

"அசுரவதம்" திரைப்படத்தை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>