கொரோனா தாக்கம் - எந்த பங்கில் முதலீடு செய்யலாம்...ஒரு வழிகாட்டி..!

இந்தாண்டின் முதல் காலாண்டான மார்ச் மாதத்தின் பிற்பாதியில் கொரோனாவின் தாக்கத்தைத் தவிர்க்க அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பங்குச் சந்தையும் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது . அந்த வீழ்ச்சியில் இருந்து இன்னும் பல முதலீட்டாளர்கள் மீளவேயில்லை , ஒரு பகுதியினர் முதலீட்டைத் தற்காலிகமாக நிறுத்தியும் வைத்துள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் குறைவதாகவே இல்லை இதனால் பல்வேறு தொழில்களும் நசுங்கி விட்டன . மேலும் அரசுகளின் கெடுபிடிகளும் மிக அதிகமாக உள்ளதால் தொழில் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையும் இப்போது இல்லை ஆனால் மேலை நாடுகளில் ஓரளவு தொழில் மையத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் . இந்த சூழ்நிலையில் நாம் மீண்டும் பங்குச் சந்தையை தூசு தட்டலாம் என்பது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் ?

இந்த கொரோனா தாக்கத்தின் போது பங்குச் சந்தையில் எந்தவிதமான ஏற்ற இறக்கமும் இல்லாமல் ஒருவாறு நிதிநிலைமைகளையும் , ஆதாரங்களையும் ஒருவாறு தக்கவைத்துக் கொண்ட நிறுவனங்கள் வங்கிகளும் , நிதி நிறுவனங்களும் மட்டுமே எனவே பாதுகாப்பான முதலீடு என்பது வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் மீதான முதலீடு மட்டுமே.

ஆனாலும் வரும் காலங்களில் டிஜிட்டல் வர்த்தகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக அமையும் என்பதால் அம்மாதிரியான நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.

அதே போன்று தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் வருகை அதிகமாக உள்ளதால் அவைகளுக்கான சந்தையும் திறந்தவன்னம் உள்ளன எனவே தொழிநுட்பம் சார்ந்த நிறுவனங்களிலும் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

More News >>