கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70

* சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

* ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

* இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்

எச்.வசந்தகுமார் என்பவர் 14 ஏப்ரல் 1950 ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் பிறந்தார். இவர் ஒரு அரசியல்வாதி , தொழிலதிபர் , எழுத்தாளர் என பண்முகவாதி. விவேகானந்த கல்லூரியில் பியுசி படித்து விட்டு திருவிதாங்கூர் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். வசந்த் & கோ வின் நிறுவனர் மற்றும் வசந்த் டிவியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் .

இவர் 2006 மற்றும் 2016 ல் நாங்குநேரி தொகுதியின் மூலம் தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

17 செப்டம்பர் 2006 ல் "வெற்றிபடி கட்டு " ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்டது.

More News >>