நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை

நடிகர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவியை பழம்பெரும் நடிகை விஜயகுமாரி வழங்கினார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பல வழிகளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், நட்சத்திர கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன.இந்நிலையில், நடிகை விஜயகுமாரி நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி பெற்றுக் கொண்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>