முகத்தை மறைத்து வந்த பிரபல நடிகை திடீரென்று வெளியிட்ட குழந்தை படம்..
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துக்கொண் டனர். திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்குஜோடியாகவும் அம்மாவாகவும் சினேகா நடித்தார். இதற்கிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்ன தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிட்டனர்.
மீண்டும் கடந்த ஆண்டு சினேகா கர்ப்பம் அடைந்தார். சென்ற ஜனவரி மாதம் அழகானப் பெண் குழந்தை பிறந்தது. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரசன்னா தை மகள் வந்தாள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். பின்னர் குழந்தைக்கு ஆதியந்தா என பயர் வைத்தனர்.
ஆதியந்தாவின் புகைப்படத்தை சினேகா பிரசன்னா வெளியிடாமல் முகத்தை காட்டாமல் மறைத்து பிஞ்சு கால்கள், பிஞ்சு கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கொண்டாடிய பிரசன்னாவின் பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆதியந்தாவின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டார் சினேகா.
பிரசன்னாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் குழந்தைக்கும் சேர்த்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். க்யூட், புஜ்ஜி செல்லம், சின்ன சினேகா என இஷ்டத்துக்கு வாழ்த்து மழை பொழிந் தனர். அதைக்கண்டு சினேகா, பிரசன்னா உச்சி குளிர்ந்தனர், பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த சினேகா, என் வாழ்க்கையை அழகாக மாற்றி அமைத்ததற்கு நன்றி, லவ் யூ ஸோ மச் என்று கூறியுள்ளார்.
சினேகாவுக்கு பதிலளித்த பிரசன்னா, நன்றி கண்ணம்மா, வாழ்நாள் முழுவதும் நாம் விவாதித்துக் கொண்டே இருக்க முடியும், யார் யாருடைய வாழ்க்கையை அழகாக்கியது என்று. என் வாழ்க்கையை நீங்கள் அழகாக மாற்றினீர்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பேன் என கூறி உள்ளார். இப்படி இருவரும் ஒருவர் மாறி ஒருவர் அன்பை பறிமாறிக்கொண்டனர்.
பிரசன்னா நடிப்பில் சமீபத்தில் மாஃபியா சேப்டர் 1 வந்தது. அடுத்து விஷாலுடன் துப்பறிவாளன் 2 பாகத்தில் நடிக்க உள்ளார்.