விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்.. மத்திய அமைச்சரை குறி வைக்கும் சுப்ரமணியன் சுவாமி!

நேற்று முன்தினம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா வரைஸ் பரவல் கடவுளின் செயல் என்று பேசினார். மேலும், ``கொரோனாவால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்துவிட்டது.நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிகழ்வாகிவிட்டது கொரோனா. கொரோனாவால் இந்த ஆண்டு மிகவும் அசாதாரண சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் மாநிலங்களுக்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை தற்போதைய சூழலில் அளிக்க முடியாது." என்று தெரிவித்திருந்தார்.

நிர்மலாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது அவரது சொந்த கட்சியை சேர்ந்த ஒருவரே கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் சுப்ரமணியன் சுவாமிதான். இதுதொடர்பாக டுவிட்டரில், ``கொரோனா கடவுளின் செயல் என்றும், இதனால் இப்போது ஜிடிபி குறைந்துவிட்டது என்று கூறினால், கொரோனா காலத்துக்கு முன்பு நாட்டின் ஜிடிபி குறைந்தது ஏன்.

ஜிடிபி சரிவானது 2015-ம் ஆண்டில் இருந்தே நிகழ்ந்து வருகிறது. 2015-ல் 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 2020-ன் முதல் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. இது கொரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். அப்படியென்றால் இதுவும் கடவுளின் செயலா?. இது தொடர்பாக விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

More News >>