மோடிக்கு 60%.. ராகுல் காந்திக்கு 69%..
ட்விட்டர் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களில் 60 சதவீதமும், ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களில் 69 சதவீதம் பேரும் போலி கணக்காளர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அரசியல்வாதிகள் பெரும்பாலோனர்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளனர். குறிப்பாக, ட்விட்டரில் ஒவ்வொரு நடிகர்கள், அரசியல்வாதிகளின் கீழ் குறைந்தது ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இதுபோல், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் கீழ் பல ஆயிரம் பேர் பாலோயர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை பின்தொடர்பவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்களின் ட்விட்டர் பக்கத்தில் போலி முகவரி கொண்ட கணக்காளர்கள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை 60 சதவீதம் பேரும், காங்கரஸ் தலைவர் ராகுல் காந்தியை 69 சதவீதம் பேரும், பாஜக தலைவர் அமித் ஷாவை 67 சதவீதம் பேரும் போலி முகவரி கொண்ட கணக்காளர்கள் பின்தொடர்வதாக தெரியவந்துள்ளது.
இதுபோல், அமெரிக்க அதிபர் டிரம்பை ட்விட்டரில் 26 சதவீதம் பேரின் கணக்குகள் போலியானவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com