ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் !

ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் ஜீவன் ப்ரமாண் சான்றிதழ் எனப்படும் வாழ்நாள் சான்றிதழ்.ஓய்வூதியம் பெறும் அனைவரும் தங்களுடைய இருப்பை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரில் சென்று ஆண்டுக்கு ஒரு முறை நிரூபணம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் .இணையவழி சான்றிதழ் ( Digital Certificate for Pensioners ) பெறும் முறையைப் பிரதமர் அவர்கள் 2014 ல் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் வாழ்நாள் சான்றிதழ் பெற விரும்புவோர் www.jeevanpramaan.gov .in என்ற இணையதளத்தின் வாயிலாகப் பெறலாம்.

இந்த இணைய தளத்தைச் சொடுக்கியவுடன் பயனாளியின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தவுடன் கைரேகை பதிவிடும் இயந்திரத்தின் உதவியுடன் தங்களின் சான்றிதழைப் பெறலாம்.கைரேகை பதிவிடும் இயந்திரம் இல்லாதவர்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு பெறலாம்.பொதுச் சேவை மையம் ( CSC) த்தை தொடர்பு கொண்டும் இந்த ஜீவன் ப்ரமாண் சான்றிதழைப் பெறலாம்.டிஜிட்டல் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கு 3 மாதங்களுக்கு மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

More News >>