காலம் காலமாக தொடரும் டூப் நடிகர்களின் சாகசம்... விஜய்க்கு டூப்போட்டவர்கள் படங்கள், வீடியோ லீக்..
சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் சாகசம் என்பது அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலத்திலும் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதென்பது எப்போதாவது அபூர்வமாக வரும் படங்களாக இருக்கும். அதற்குக் காரணம் இரண்டு வேடத்தில் ஒரே ஹீரோ தான் நடிப்பார். கேமராவை ஒரு பக்கம் மறைத்துவிட்டு முதலில் சில காட்சிகள் எடுப்பார்கள் பிறகு மறுபக்கம் வேறு காஸ்டியூம் அணிந்து அதே ஹீரோ நடிக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் டூப் என்பது அந்த காலத்திலும் இருந்தது. சில படங்களின் காட்சியை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்கள் மேலிருந்து கீழே விழும் ஆபத்தான காட்சிகள் போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் டூப் நடிகர்கள் நடிப்பார்கள்.
நவீன வளர்ச்சி விஎஃப் எக்ஸ் தொழில் நுட்பம் வந்தபிறகு இரட்டை வேடம் என்ன ஒரே ஹீரோ 20 வேடம் கூட நடிக்க முடிகிறது. ஆனால் ஹீரோவுக்கு மாற்றாக அதே உயரம், உடல் எடை கொண்ட மற்றொரு நடிகர் தேவை. ஹீரோ எடுக்க வேண்டிய ரிஸ்க்கெல்லாம் டூப் நடிகர் நடிப்பார். சமீபத்தில் பிரபலங்களுக்கு டூப் போட்டு நடிக்கும் ஸ்ரீ ராம் என்பவரின் பெயரில் டிவிட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் பிகில் விஜய்க்கு பதிலாக ஸ்ரீராம் நடித்திருந்த புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பானது. தற்போது அதே டிவிட்டர் பக்கத்திலிருந்து விஜய் நடித்த மெர்சல் படத்தின் மேக்கிங் வீடியோ லீக் ஆகி இருக்கிறது. மெர்சலில் விஜய் டபுள் ஆக்ஷன் நடித்தார். அதில் டாக்டர் விஜய்யைக் கடத்தி வந்து சுத்தியால் தாக்கும்போது, மாஜிக் மேன் விஜய் தடுத்துத் தாக்குவார். இதில் நடிகர் ஸ்ரீராமே விஜய்க்கு டூப்பாக நடித்துள்ளார், அந்த வீடியோ கசிந்துள்ளது. ஆனால் இது போலி பக்கம் என்று சம்பந்தப்பட்ட டூப் நடிகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்தார் லொள்ளு சபா ஜீவா. அதுபற்றி தெரிவித்தபோது 80 சதவீத காட்சிகளில் ரஜினி சார் தான் நடித்தார். 20 சதவீத காட்சிகளில் மட்டும் ஜீவா நடித்தாராம்.