உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 133வது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 133வது இடம் கிடைத்துள்ளதாக ஐ.நா.அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அமைப்பான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (ஹிழிஷிஞிஷிழி) சார்பில் கடந்த சில மாதங்களாக உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஆய்வை ஆன்லைன் மூலம் நடத்தியது. இந்த ஆய்வில், மொத்தம் 156 நாடுகள் பங்கேற்றன. இதில், உலகிலேயே பின்லாந்து நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்களை தொடர்ந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கா 18வது இடத்திலும், இந்தியா 133வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 133வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>