தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா தொற்று உண்மையா இல்லையா?
பல்வேறு படங்களைத் தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவிட் -19 சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்று பரபரப்பானது, ஐசரி கணேஷ் படத் தயாரிப்பாளருக்கும் அப்பாற்பட்டு கல்வியாளர், தனியார் பல்கலைக் கழக வேந்தராக இருக்கிறார் என்பதால் இந்த தகவல் வேகமாகப் பரவியது.
இதுகுறித்து தகவல் வெளியானவுடன் ஐசரி கணேஷ் பட நிறுவன பிஆர் ஓ விடம் விசாரித்தபோது அதுபற்றி உறுதியாக தங்களுக்குத் தெரியாது என்று கூறினார். தொற்று என்று தகவல் பரவிய நிலையில் ஐசரி கணேஷ் கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அடுத்த சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட ஐசரி கணேஷிடமே பேசிவிட்டேன் அவருக்குத் தொற்று எதுவுமில்லை என்றும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் ஐசரி கணேஷுக்கு தொற்று என்பது வெறும் வதந்தி என்றே கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தனது வீட்டில் குடும்பத்துடன் பொழுதை செலவழிக்கிறார் என்று கூறப்படுகிறது.
திரைப்படங்கள் தேவி, போகன், எல்.கே.ஜி, கோமலி போன்ற பல படங்களை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இப்போது, ஜோசுவா இமை போல் காக்க, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரிக்கிறார். ஷங்கரின் 2.0 போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலுக்கு எதிராகப் போட்டியிட்டார் அடுத்து ஐசரி கணேஷ். இது பரபரப்பானது.