மாஸ்டர் படத்தை முழுசாக பார்த்த விஜய்.. இயக்குனரிடம் என்ன சொன்னார் தெரியுமா?
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். அதையும் மூட வேண்டும் என்று சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கூறினார். ஆனால் எல்லா கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.திரைத்துறையினரின் நம்பிக்கையாக மாஸ்டர் படம் இருக்கிறது. அப்படம் ரிலீஸானால் மீண்டும் தியேட்டரில் கூட்டம் அலைமோதும் பழைய நிலைமை திரும்பும் என்று தியேட்டர்காரர்கள் நம்பி உள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று படத் தரப்பு அடிக்கடி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
மாஸ்டர் படத்தினை தளபதி விஜய்க்கு சிறப்புக் காட்சியாகப் படத் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் திரையிட்டனர். படம் பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆவலுடன் படக் குழுவும் காத்திருந்தது. படத்தை ரசித்துப் பார்த்த விஜய் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜைப் பாராட்டினார். சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். மீண்டும் நாம் இணைந்து பணியாற்றலாம் என்று லோகேஷிடன் விஜய் தெரிவித்தாராம். எனவே விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆகிய மாஸ்டர் படக் குழு மற்றொரு அதிரடிக்குத் திட்டமிட்டிருப்பது முடிவாகி உள்ளது என்றே தெரிகிறது.
மாஸ்டர் படத்துக்கு ஒன்றிரண்டு ஒடிடி தளங்கள் கைகளில் கோடிகளை வைத்துக் கொண்டு பேரம் பேசிக்கொண்டிருந்தாலும், விஜய்யும் தயாரிப்பாளரும் இதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை. ரசிகர்களுக்குப் படத்தைப் பெரிய திரையில் திரையிட வேண்டுமென்றே விருப்புகிறார்களாம். 'மாஸ்டர்' படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருக்கிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இதில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா எரேமியா, சாந்தனு பாக்யராஜ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.