நீ பாதி நான் பாதி திருமணத்திற்குப் பின் மனைவியின் பெயரை பின்னால் சேர்த்த வாலிபர்
திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் கணவனின் பெயரைத் தான் மனைவி தன்னுடைய பெயரின் பின்னால் சேர்த்துக்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் இதுதான் நடைமுறையாக உள்ளது. ஆனால் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஒரு வாலிபர் திருமணத்திற்குப் பின்னால் மனைவியின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளார். ரியான் மாரிசன் என்ற வாலிபர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது: 'நண்பர்களே....எனக்கு நாளை திருமணம்.... திருமணத்திற்குப் பிறகு வழக்கமாகக் கணவனின் பெயரைத் தான் மனைவி தன்னுடைய பெயரின் பின்னால் சேர்ப்பார். ஆனால் நான் மிகவும் வித்தியாசமானவன்...என்னுடைய மனைவியின் பெயரை எனது பெயரின் பின்னால் சேர்க்க நான் தீர்மானித்துள்ளேன். இன்று முதல் நான் ரியான் மாரிசன் என்ற எனது பெயரை ரியான் மியோஷி என மாற்றியுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ரியானின் இந்த செயலுக்கு ஏராளமானோர் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.