கேரளாவில் இனி ஜனவரியில் தான் ஸ்கூல் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கேரளாவில் ஜனவரி மாதத்தில் தான் பள்ளிகளைத் திறக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இன்று திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது: தற்போதைய சூழ்நிலையில் இந்த வருடத்தில் இனி பள்ளிகளைத் திறக்க முடியுமா என்பது சந்தேகமே. அடுத்த ஜனவரியில் மட்டுமே பள்ளிகளைத் திறக்க முடியும். எனவே ஜனவரியில் ஒரு புதிய சூழ்நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். 500 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.