நடிகை சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ்: கால தாமதமாகும் பயோபிக் திரைப்படம்
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான 'மஹாநதி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் 1960 காலகட்டங்களில் புகழின் உச்சத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் 'மஹாநதி' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இத்திரைப்படம் இம்மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தின் விஃப்எக்ஸ் வேலைகள் நிறைவடையாததால் மார்ச் மாதம் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகாது என இப்படத்தின் இயக்குநர் நாகு அஸ்வின் அறிவித்துள்ளார். நடிகை சாவித்ரியின் திரைப்பட வாழ்வும் சொந்த வாழ்வும் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி பட்ஜெட்டிலி தயாராகியுள்ள இந்த 'மஹாநதி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com