சினிமா படபிடிப்புக்கு அனுமதி:5 மாதம் ஓய்ந்திருந்த படக்குழுவினர் நாளை முதலே ஷூட்டிங் தொடங்க திட்டம்
சினிமா படபிடிப்புக்கு அனுமதி: 5 மாதமாக முடங்கி இருந்த படப்பிடிப்புகள் 75 பேர்களுடன் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார், தியேட்டர்கள் திறப்பு இப்போது இல்லை
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே ஒட்டுமொத்தமாக சினிமா துறை முடங்கியது. படப்பிடிப் புகள், தியேட்டர்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள், படப்பிடிப்புக்கு பின்னுள்ள பணிகள் என் எல்லாமே முடங்கியதால் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலை ஞர்கள் தொடங்கி 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் பல கோடி இழப்பு ஏற்பட்டு திணறினர். டிவி ஹூட்டிங் பணிகளும் நிறுத்தப்பட்டிருந் தன.
2 மாதங்களுக்கு முன் டிவி படப்பிடிப் புக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்புக்கு பிந்தய பணிகளுக்கும் அனுமதி தரப்பட்டது. சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. திரைத்துறையினர் சார்பில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன். இயக்குனர் பாரதி ராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு சங்கத்தின் சார்பில் பாரதிராஜா படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதல்வர் எடப்படி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா படப்பிடிப்புகள் 75 பேர்களுடன் கொரோனா கட்டுபாடுகள் கடைபிடித்து நடத்திக்கொள்ளலாம். பார்வையா ளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்தார், அதே சமயம். சினிமா தியேட்டர் திறப்புக்கு அனுமதி தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறி உள்ளார்.5 மாதத்துக்கி பிறகு ஷூட்டிங் பணிகள் தொடங்குவதால் படக் குழுவினர் அனைவரும் சுறுசுறுப்பாகி உள்ளனர். நாளை முதலே சில படப்பிடிப்பிகள் தொடங்குவதற்கான பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளனர்.