லண்டன், நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறுபான்மையினர் போராட்டம்..
பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையினர் அந்நாட்டுக்கு எதிராக லண்டனிலும், நியூயார்க்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உலக அளவில் கலவரங்களின் போது காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பான்மையினரின் தாக்குதலால் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் பற்றிய தகவல்களை அறிவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அவர்களின் உறவினர்கள் குறித்து நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில். பாகிஸ்தானில் இருந்து வந்த சிந்தி பலூச் அமைப்பினர் லண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் முன்பாக பாகிஸ்தானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காக அவர்கள் கோஷம் எழுப்பினர். இதே போன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் சிறுபான்மையினர் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.