`பௌலிங்கில சொதப்பிட்டோம்hellip நொந்துகொள்ளும் வங்கதேசம்

நேற்று இந்தியா- வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த டி20 போட்டியில், வங்கதேசம் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மெஹூமுதுல்லா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3 போட்டிகளில் இந்திய அணியும் மற்ற இரு அணிகளும் தலா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

நேற்று இந்தியா- வங்கதேசத்துக்கு இடையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேசம், 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவிடம் இரண்டாவது முறையாகவும் வங்கதேசம் இந்தத் தொடரில் தோல்வியுற்றுள்ளது.

இந்தத் தோல்வி குறித்து மெஹூமுதுல்லா, `உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியா நிர்ணயித் இலக்கை நாங்கள் கண்டிப்பாக கடந்து விடுவோம் என்றுதான் நினைத்தேன். ஓபனிங் நன்றாக அமைந்தது. ரஹீமும் 72 ரன்களை குவித்தார். ஆனால், மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து ஆடாததால், தோல்வியைத் தழுவினோம். குறிப்பாக, பௌலிங்கில் நாங்கள் ரோம்பவே சொதப்பிவிட்டோம்.

ஆரம்பத்தில் சில பௌலர்கள் நன்றாக பந்துவீசினாலும், இறுதி ஓவர்களில் ரன்களை வாரிக் கொடுத்து விட்டோம். அதுவே தோல்விக்கு வித்திட்டது’ என்று தோல்வி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

 

More News >>