ரஜினி, கமல் கட்சியெல்லாம் இல்லை..என் வழி தனி வழி - அடித்து சொல்லும் பிரபல நடிகர் மகள்..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரபல நடிகர்கள் கட்சி தொடங்கும் காலம் நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நடத்தி வருகி றார். ஒருமுறை தேர்தலிலும் போட்டி யிட்டது அவரது கட்சி. அடுத்து பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருப்பது ரஜினி தொடங்க உள்ள கட்சிதான். 2021ம் ஆண்டு கட்சி தொடங்கி எல்லா தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் தனது மன்றங்களை இணைத் ததுடன் ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி அனைத்து தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் நியமித்திருக்கிறார்.
தற்போது ரஜினி கட்சி தொடங்கும் பேச்சு அடங்கி இருந்தாலும் தேர்தல் நெருக்கத் தில் அதற்கான வேலைகள் தொடங்கி அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மற்றபடி சில நடிகர்கள் எந்த கட்சியில் சேரலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர், விஜயகாந்த், சரத்குமார் ஏற்கனவே கட்சி களை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதே சமயம் நடிகர்கள் சரத்குமார் மகள் வரலட்சுமி, சத்யராஜ் மகள் திவ்யா அடிக்கடி அரசியல் பேசி வருகின்றனர். இவர்களும் அரசியலில் குதிப்பார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.
திவ்யா கூறும்போது,ஒரு அரசியல் கட்சி யில் சேர்வேன். ஜாதி, மதம் சார்ந்த கட்சியில் சேர மாட்டேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சியிலும் சேர மாட்டேன். எனக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர் மற்றும் நல்லகண்ணு என்றார். திவ்யா இப்படி கூறியிருப்பதால் கம்யூனிஸ்ட் அல்லது அதிமுகவில் சேர் வார் என்று பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இரண்டும் இல்லாமல் திமுக விலும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற யூகமும் கூடவே வருகிறது.
எதிர்பார்த்த நடிகர்கள் எல்லாம் அரசிய லுக்கு வந்திருக்கும் நிலையில் அடுத்து விஜய்யும் அரசியல் நகர்வுகளை அமைதி யாக தொடங்கி இருக்கிறார் என்று கூறப் படுகிறது. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் டெல்லி சென்று அரசியல் கட்சி பதிவு செய்வதற்கான நடைமுறைகளை ரகசியமாக நடத்தி உள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்குமுன் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.