ஆண்களுக்கும் 5 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - புதிய தீர்மானம்

பெண்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் அலுவலகங்களில் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை அளிக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஒரு சில நாடுகளில் தனியார் அலுவலகங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் எங்குமே குழந்தைகளை கவனிப்பதற்கு என்று ஆண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது கிடையாது.

இந்நிலையில் முதன்முதலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தைகளை கவனிப்பதற்காக 5 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டாட்சி தொழில் சட்ட திருத்தத்தை ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலிபா பின் செய்யது அல் நஹ்யான் அங்கீகரித்துள்ளார். குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தனியார் துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு 5 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கும் இது போன்ற விடுமுறை வழங்கும் முதல் அரபு நாடு ஐக்கிய அமீரகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>