அதிக டிஸ்லைக்ஸ் பெற்ற மோடியின் மான் கி பாத் வீடியோ..! நெட்டிசைன்கள் பாஜகவுக்கு உணர்த்த நினைப்பது என்ன...!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மக்களுடன் உரையாடும் 'மன் கி பாத் " நிகழ்வை மேற்கொள்வார். சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அதில் உரையாடுவார்.அந்த நிகழ்ச்சியின் 68வது நிகழ்வைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் , நோயின் தாக்கத்தால் நசுக்கப்பட்ட பொருளாதாரம், தமிழகத்தின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை , ராஜபாளையம் நாட்டு நாய் வளர்ப்பு போன்ற பல தலைப்புகளில் அவர் உரையாடினார். இந்த காணொளியை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிட்டது .

அந்த தளத்தை சுமார் முப்பது இலட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். எனினும் பதிவு செய்த காணொளியைப் பலர் பார்த்துள்ளனர் . ஆனால் அந்த வீடியோவை இது வரை 75000 பேர் மட்டுமே லைக் செய்துள்ள நிலையில் 5,30,000 பார்வையாளர்கள் டிஸ்லைக் (dislike ) செய்துள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை , டிமானிடைசேஷன் ( Demonetization ) , மாட்டிறைச்சி விவகாரம் போன்ற நிகழ்வுகளின் போது கூட இம்மாதிரியான எதிர்வினையை மோடி அரசுக்கு மக்கள் வெளிப்படுத்தவில்லை ஆனால் இந்த கொரோனா எனும் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அரசின் எந்தவிதமான செயல்பாடுகளும் மக்களுக்குத் திருப்தி தர வில்லை என்றே தருகிறது. மேலும் நீட் தேர்வு விவகாரம் , ஜேஇஇ தேர்வு விவகாரம் போன்றவைகள் கூட காரணமாக இருக்கலாம் இந்த டிஸ்லைக்குகளுக்கு.

More News >>