இன்றைய தங்க நிலவரம் !!
இந்தியக் கலாச்சாரத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது தங்கம் . அதனால் தான் தங்கத்தின் மீதான மோகம் இன்னும் குறைந்த பாடில்லை . தங்கத்தை அதன் தரத்திற்கு ஏற்ப பல நிலைகளாகப் பிரிக்கலாம் . மேலும் நாம் தங்கத்தை காரட் ( Karat ) என்ற அளவீட்டின் அடிப்படையில் தான் குறிப்பிடுகிறோம்.
24K, 22k , 20k , 18k எனத் தங்கம் வகைப்படுத்தப்படுகிறது .
இதில் 24 காரட் என அழைக்கப்படும் தங்கமானது தூய தங்கம் ஆகும். இதனை ஆபரணங்களாக மாற்ற முடியாது . இதில் 100 சதவீதமும் தங்கம் மட்டுமே இருக்கும் மற்ற தனிமங்கள் ஏதும் இருக்காது . இது மிக மெருதுவாக இருக்கும்.
22 காரட் தங்கம்( ஆபரணத்தங்கம் ) என்பது 24 ல் 22 பகுதியளவு தங்கமும் மற்ற 2 பகுதியளவு தேவைகளுக்கு ஏற்ப மற்ற தனிமங்கள் கலக்கப்படும். அதாவது 22/24 * 100 என்று கணக்கிட்டால் 91.6 என்ற அளவில் தங்கம் கலக்கப்படும் மீதமுள்ள 8.4 சதவீதம் வேறு தனிமங்கள் கலக்கப்படும்.
20 காரட் தங்கத்தில் 83.33 என்ற சதவீதத்தில் தங்கமும் 16.67 என்ற அளவில் மற்ற தனிமங்கள் சேர்க்கப்படும்.
18 காரட் தங்கத்தில் 75 சதவீதம் தங்கமும் மீதமுள்ள 25 சதவீதம் மற்ற தனிமங்கள் சேர்க்கப்படும். இந்த தரத்திலான தங்கம் வைர நகைகளில் பயன்படுகிறது மற்ற தரத்திலான தங்கத்தை வைர ஆபரணங்களில் பயன்படுத்த இயலாது .
இன்றைய நிலவரம்
22 காரட் தங்கம் 1 கிராம் - 4,925 ( +0.98%)8 கிராம் - 39,400
24 காரட் தங்கம்1 கிராம் - 5,373 ( +0.98%)8 கிராம் - 42,984.