அரசாங்கத்தின் ‌மானியத் திட்டங்களைப் பதிவு செய்யலாம்...சந்தை நிலவரத்தை ‌பெறலாம் - விவசாயிகளுக்கு உதவும் இந்த ஆப் பற்றி தெரிந்து கொள்வோம்..!

விவசாயிகளுக்கு பயன்படும் உழவன் ஆஃப்

தமிழக அரசு விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் , விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரம் போன்றவற்றையும் இந்த ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆஃப்பை Play store ல் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் இந்த ஆஃப் install செய்து பின்னர் உங்களின் மொபைல் எண் , ஆதார் எண் போன்றவற்றை உள்ளீடு செய்து பயனர் பதிவை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த ஆஃப்பை நீங்கள் இரண்டு மொழிகளில் ( ஆங்கிலம் , தமிழ் ) பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்த ஆஃப் ல் 1.மானியத் திட்டங்கள் 2.இடுபொருள் முன்பதிவு3.பயிர் காப்பீடு விவரம்4.உரங்கள் இருப்பு நிலை 5.விதை இருப்பு நிலை 6.வேளாண் இயந்திரம் வாடகை மையம் 7.சந்தை விலை நிலவரம் 8.வானிலை அறிவுரைகள்9.பண்ணை வழிகாட்டி 10.இயற்கை பண்ணை பொருட்கள்11.FPO ( Farmer Production Organization ) பொருட்கள்12.அணை நீர் மட்டும்13.வேளாண் செய்திகள் 14.பூச்சி/ நோய் கண்காணிப்பு/பரிந்துரை 15.அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம் 16.உழவன் இ- சந்தை

போன்ற அனைத்து தகவல்களையும் இந்த ஆஃப் ல் இருந்து பெறலாம்.

மேலும் மானிய திட்டங்களை இந்த ஆஃப் - ன் மூலமும் பதிவு செய்யலாம் மற்றும் அதற்கான முன்பதிவையும் இந்த ஆஃப் ல் இருந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இயந்திரமயமாக்கும் திட்டத்தையும் இந்த ஆஃப் - ன் மூலமும் பதிவு செய்து பெறலாம்.

More News >>