தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல்..

தமிழக சட்டமன்றத்தில் 2018-2019ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் `தாக்கல் செய்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக அரசு பதவி ஏற்ற பின் நிதி அமைச்சர் என்ற நிரந்தர பொறுப்புடன் திரு.ஓ.பன்னீர்செல்வம் பதவி வகுத்து வருகிறார். ஏற்கனவே நிதி அமைச்சர் என்ற வகையில் அவர் 7 முறை நிதிநிலை தாக்கல் செய்துள்ளார் இன்று சட்டசபையில் 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். சிறப்பு பொறுப்பாக துணை முதலமைச்சர் பதவியும் வகுத்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி ஏற்று அவரின் தலைமையிலான அரசின் 2வது தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தற்போது துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்புகள் தமிழகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது.

இதற்கிடையே, சட்டமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள்ச கருப்பு சட்டை அணிந்து வந்தனர். ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>