பட்ஜெட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்
தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை 1,789 கோடி ரூபாயில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 8-ஆவது பட்ஜெட்டாகும்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை 1,789 கோடி ரூபாயில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன.
அதேபோல, பசுமை வீடுகள் திட்டத்தில் 420 கோடி ரூபாயில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். குழந்தைக்களுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2-ஆவது மாநிலமாகவும் இருபதாகத் தொரிவித்தார். அத்துடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com