உலகிற்க்கு,சுயம்பாய் தோன்றியவள் பெண்பெண்களின் மென்மையான பண்புகள்
பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைப்பதற்கு ஏற்றாற்போல் இவ்வுலகில் துணிவுடன் செயல்பட்டு வருகின்றனர் பெண்கள்.கருவை உண்டாக்குவது மட்டுமே ஆண்களாக இருப்பினும் ஒரு கருவினை பத்து மாத காலம், சித்திரவதை என்னும் வலையில் சிக்கி வலியில் துடிப்பவள் பெண்.பிரசவவலியில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தும் ஒரு பெண்மணி அழகான உயிரை இம்மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஈன்று எடுக்கின்றாள்.
ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பெண்கள் சிறுபிள்ளையாக இருந்த வேளையில் குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது இவற்றையெல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றவள் பெண்மணிகள் தான் என்பது விஞ்ஞான உண்மை.
சாதனை பெண்மணிகள்:-
அறிவில் கூட முதன்மையானவர்கள் பெண்மணிகளே,எனெனில் அறிவை வளர்க்கும் அறிவு கூடமான பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்ப்பிக்கும் ஆசான்களாக பெரும்பாலும் பெண்களையே தேர்வு செய்கின்றனர்.மேலும் பெண்கள் சகிப்புத்தன்மை அதிகம் வாய்ந்தவர்கள் என்பதால் செவிலியர்கள்,மருத்துவர்கள்,மற்றும் விமானத்துறையில் கூட பெண்கள் உதித்த சூரியன் போல் சிரித்துக் கொண்டு வலம் வருகின்றனர்.
தோழமை உணர்வு:-
பெண்கள் எல்லோரிடத்திலும் மிக எளிமையான முறையில் நட்பு பாராட்டுவதில் வல்லவர்கள் தன் மனசிற்கு பிடித்தவர்களை எந்த வகையிலும்,யாரிடத்திலும் விட்டுக்கொடுக்காத தன்மை உடையவர்கள்.தன் பிறந்த வீட்டின் உறவினர்களையும் மற்றும் புகுந்த வீட்டின் உறவினர்களையும் சமநிலையில் நிலைப்படுத்துவது என்பது சுலபமான காரியம் இல்லை என்பது ஆண்களும் அறிந்த உண்மை.
"மாதராய் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது ஒரு சவால்.இவர்களே நம் நாட்டிற்கும் மற்றும் ஆண்களின் வாழ்க்கைக்கும் ஒளியாய் திகழ்கின்றனர்"