ரஜினி நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க திட்டம். இயக்குனர் யார் தெரியுமா?
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.தற்போது இதில் டிவிஸ்ட் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.
அதாவது ரஜினி நடிக்க இருந்த நிலையில் அவருக்குப் பதிலாகக் கமலே நடிப்பார் என்று கூறப்படுகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் அவரது பாணியில் ஆக்ஷன் படமாக இருக்குமாம். இப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தைக் கமல் தயாரிப்பார் என்றும் தெரிகிறது.லோகேஷ் கனகராஜுக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஒன்றுக்கு இரண்டு படம் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்க உள்ளாராம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து மீண்டும் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்தனர். அந்த கனவு கனவாகவே போய் விடுமா அல்லது தற்போது கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலாவது நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.