கொரோனாவின் உண்மையான முகம் டிசம்பர் மாதம் வெளியாகும்

டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது 213 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது.கொரோனா ஆடிய கோரத் தாண்டவத்தில் 8,12,537 பேர் உயிர்களை காவுவாங்கியுள்ளது.இதனை தீர்த்து கட்ட எல்லா நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முழு மூச்சாய் செயல்பட்டு வருகின்றனர்.கிட்டதட்ட 5 மாதத்திற்கு மேல் இந்த கொரோனா மக்களை வீட்டிலேயே கட்டிபோட்டுவிட்டது.இந்நிலையில் நிபுணர்கள் நடத்திய ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.அவை என்னவென்று பார்ப்போம்.

கொரோனாவிற்கு பிடித்தது குளிர்காலமாம்:-

சீனாவில் கொரோனா ஆரம்பித்த காலமும் குளிர் காலம் தான்.இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் குளிர் காலம் தொடங்கப்போவதால் சுகாதார நிபுணர்கள் இந்த குளிர் காலத்தில் கொரோனா 2 மடங்கு பயங்கரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மனிதர்களுக்கு பிடித்த குளிர் காலம் தற்போது வைரஸ்க்கும் ரொம்ப பிடிக்குதாம்....

உயிர் மரணங்கள் அதிகரிக்கும்:-

வருகின்ற டிசம்பர் மாதம் நமக்கு மிகவும் சவாலாக இருக்கலாம்.தற்போது இருக்கும் பாதிப்பை விட 2 மடங்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தால் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில், உயிர் இழப்பின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய சரித்திரத்தை அடைந்து இருக்கும்.வைரஸ் பரவல் டிசம்பர் மாதம் தீவிரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

தடுப்பூசியை மட்டுமே நம்புவது தவறு:-

இங்கிலாந்தில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி என்பவர், மருத்துவ வல்லுனர்கள் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் முழு முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் வெறும் தடுப்பூசியை வைத்து மட்டும் வருங்கின்ற குளிர் காலத்தை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று.இது வரைக்கும் கொரோனாவை எதிர்த்து எந்த தடுப்பூசியையும் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வெளிவருவது மிகவும் கடினம்.

இதனால் நம்மிடம் உள்ள வளங்களை வைத்து திட்டமிட்டு கொரோனாவை விரட்ட வேண்டும்...என்பதே மக்களை காக்க ஒரே வழி....

More News >>