ரஜினி இயக்குனர் உருவாக்கும் புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் ரஞ்சித், தான் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்திருக்கிறார்.
புதுப்படத்துக்கு 'குதிரை வால்' எனப் பெயரிட்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.கபாலி காலா படங்களுக்கு முன்னரே அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இயக்குனராக இருந்தவர் திடீரென்று நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் அர்த்தமுள்ள படங்கள் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தயாரிக்கும் குதிரை வால் படத்தை மனோஜ் லியானெல் மற்றும் சியாம் சுந்தர் ஆகிய இரட்டையர்கள் இயக்குகின்றனர். கலையரசன், அஞ்சலி பட்டீல் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிரதீப்குமார் இசை அமைக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.