டாய்லெட் பிளஷ் வேலை செய்யவில்லை அதற்குள் இருந்தது என்ன தெரியுமா?
ஆஸ்திரேலியாவிலுள்ள வடக்கு குயின்ஸ்லாந்து கோர்டெலியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பியர்சன். இவரது வீட்டில் கடந்த சில தினங்களாக டாய்லெட் பிளஷ் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் ஒரு பிளம்பரை அழைத்துச் சரி செய்யத் தீர்மானித்தார். ஆனால் பிளம்பர் கூறியபடி வரவில்லை. இதனால் தானே பிளஷ்ஷை சரிசெய்ய சோபியா தீர்மானித்தார். டாய்லெட்டுக்கு சென்று மூடியைத் திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
பிளஷ்ஷின் மேல் பகுதியில் பாம்புகள் குடும்பத்துடன் வசித்து வந்தது தான் சோபியாவின் அதிர்ச்சிக்குக் காரணம். முதலில் அவர் பயந்தாலும், அது விஷப்பாம்புகள் அல்ல என்று தெரிந்த பின்னர் நிம்மதி அடைந்தார். உடனடியாக இது குறித்து தனது நண்பருக்கு போன் செய்து விபரத்தைக் கூறினார். அந்த நண்பர் வந்து 4 பாம்புகளையும் பிடித்து அருகிலுள்ள வயலில் கொண்டு விட்டார். அந்த அரிய காட்சியைப் போட்டோ எடுத்து சோபியா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: கடந்த சில நாட்களாகவே டாய்லெட் பிளஷ் சரியாக வேலை செய்யவில்லை. பிளம்பரை அழைத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் நானே அதைச் சரி செய்யத் தீர்மானித்து பிளஷ்ஷை திறந்து பார்த்தபோது, ஒன்றல்ல நான்கு பாம்புகள் சுகமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தன. முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் அது விஷப்பாம்புகள் அல்ல என்று தெரிந்த பின்னர் தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. அவை 50 சென்டிமீட்டர் முதல் 3 அடி வரை நீளம் இருந்தது என்று கூறினார்.