காமெடி நடிகை திடீர் திருமண நிச்சயதார்த்தம்.. உடலை குறைத்தது இதுக்குதானா?
நடிகைகள் குண்டாக அல்லது ஒல்லியாக இருந்தால் காமெடி ரோலுக்குத்தான் அழைப்பார்கள். அப்படி நடித்துச் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நடிகைகள் மனோரமா, சச்சு, கோவை சரளா போன்றவர்கள் காமெடி வேடங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றார்கள்.நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவுக்குத் தோழியாக நடித்தார் வித்யூலேகா. இப்படத்தைக் கவுதம் மேனன் இயக்கினார். வித்யூலேகா சற்று பூசினார் போன்ற உடம்பு என்றாலும் கெத்து காட்டி நடித்து இருப்பிடத்தைத் தக்க வைத்தார்.
விஜய்யுடன் புலி, ஜில்லா அஜீத்தின் வீரம், வேதாளம், மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு எனப் பல படங்களில் நடித்தார். திடீரென்று குண்டான தனது தோற்றத்தை கடும் உடற்பயிற்சி யோகா, உணவுக் கட்டுப்பாடு மூல குறைக்கத் தொடங்கினார். கதாநாயகியாக நடிக்க முயற்சி மேற்கொள்கிறார் என்றே எண்ணினார்கள். ஆனால் எல்லாம் கல்யாணத்துக்காக அவர் தனது தோற்றத்தைக் குறைத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.நடிகை வித்யூலேகாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை சஞ்சய்வாத்வானி. ஊரடங்கு நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் வித்யூலேகா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது இணைய தள பக்கத்தில் புகைப்படத்துடன் நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் வித்யூலேகா. அவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை வித்யூலேகா வேறுயாருமல்ல பல படங்களில் வக்கீல் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கும் மோகன்ராம் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.