சிக்கனில் சூப்பர் டேஸ்ட்டான உப்பு கறி செய்வது எப்ப்டி??

அசைவ உணவில் அதிக நபர் விரும்புவது சிக்கன் மட்டுமே.சிக்கனில் எந்த வகை சமைத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த ஊரடங்கு காலத்தில் அசைவம் சாப்பிடுவது சற்று கடினமாகத்தான் இருந்தது.ஆனால் இப்பொழுது ஊரடங்கு இல்லாத காரணத்தினால் எது வேண்டும்னாலும் சமைத்து சுவைக்கலாம்.நாம் இப்பொழுது சிக்கனில் எப்படி உப்பு கறி செய்வது குறித்து பார்க்கலாம் நீங்களும் வீட்டில் சிக்கன் சமைத்தால் இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்...

தேவையான பொருள்கள்:-

சிக்கன்-1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

மிளகாய் தூள்-1 ஸ்பூன்

கரம் மசாலா-2 ஸ்பூன்

மஞ்சள் தூள்-1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு

வர மிளகாய்-5

கறிவேப்பிலை-சிறிது

வெங்காயம்-1

மிளகு தூள்-1 ஸ்பூன்

கொத்தமல்லி-சிறிது

செய்முறை:-

முதலில் சிக்கனை நன்கு அலசி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிக்கன்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.சிக்கன் வெந்ததும் அதை தனியாக மாற்றி கொள்ளவும்.

அதே வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை,வரமிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

அதன்பின்,வேக வைத்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு பிரட்டி 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

கடைசியில் மிளகு தூள்,கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும்

சுவையான சிக்கன் உப்பு கறி தயார்...

More News >>